பவுலிங் போடும் தல அஜித்..! வைரலாகும் வீடியோ

0
361
Ajith

தமிழ் சினிமாவில் தல அஜித் ஒரு முக்கிய நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஒரு கார் ரேஸர் என்பது நம் அனைவரும் அறிந்த விடயம் அதையும் தாண்டி நடிகர் அஜித் கிரிக்கெட்டும் விளையாடியுள்ளார் என்றால் பலரும் சற்று புருவத்தை உயர்த்துவார்கள்.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது ரசுகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.தற்போது வரை “விஸ்வாசம்” படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் 2 மில்லின் ட்வீட்களை கடந்துள்ள நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு மற்றுமொரு கொண்டாடமான விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். வெள்ளை நிற ஆடையில் அஜித் அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது பந்து வீசியுள்ளார். தற்போது அஜித் பந்துவீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.