பாதி வாழ்க்கையை வாழ்ந்துட்டேன், இதான் என் முதல் FDFS – முதல் முறையாக அஜித் படம் குறித்து பதிவிட்ட அவரின் சொந்த தம்பி அனீல்.

0
833
ajith
- Advertisement -

நீண்ட நாள்கள் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் இன்று வெளியாகி அஜித் ரசிகர்களின் மூன்று ஆண்டு கால பசிக்கு தீனி போட்டு இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது.அதுமட்டுமில்லாமல் படத்தில் அம்மா-மகன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கண்கலங்கவைத்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி இருகிறது.

- Advertisement -

வலிமை படம் குறித்து அஜித்தின் தம்பி :

மேலும், வலிமை படம் குடும்ப பிரச்சினைகள், குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்த நிலையில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அஜித்தின் தம்பி அனீல் குமார், தான் வலிமை முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அஜித்திற்கு ஒரு தம்பி இருக்கிறார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். இவரும் அஜித்தை போல மிகவும் பிரைவேட்டான ஒரு நபர் தான். இதுவரை இவரை பற்றி பெரிதாக செய்திகள் வெளியானது இல்லை. அதே போல இணையத்தில் கூட இவரது புகைப்படங்கள் மிகவும் குறைவு தான். இவர் Jodi365.com என்ற திருமண தகவல் இணையதளத்தை நடத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரின் தம்பியாக இருந்தும் அந்த அடையாளத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அஜித்தை போல எளிமையாகவே இருந்து வருகிறார் அனீல்.

-விளம்பரம்-

FDFS பார்க்க காத்துகொண்டு இருக்கிறேன் :

இப்படி ஒரு நிலையில் முதல் முறையாக அஜித் படம் குறித்து அனீல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “வலிமை அப்டேட்டை பற்றி எப்பொழுதும் என்னிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால் எரிச்சலடைவீர்கள். இருப்பினும் நான் இப்போது ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அஜித்தை போல அதே பேச்சு :

பொதுவாக அஜித்தின் தம்பி அஜித் படங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது இல்லை. இதுகுறித்து தெரிவித்துள்ள அனீல் குமார், உண்மை தான், நான் பொதுவாக படங்கள் குறித்து எந்த பதிவையும் போடுவது இல்லை. ஆனால், எனது #வலிமை ட்வீட்டுக்கு கிடைத்த மகிழ்ச்சியான பதிலைக் கண்டு, பொறுப்பான காரியம் சேர்க்க வேண்டும். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க நான் நினைக்கவில்லை. நான் என் சொந்த உற்சாகத்தை மட்டும் பகிர்ந்து கொண்டேன். உங்கள் நேரம், உங்கள் பணம் நண்பர்களே அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள் என்று அஜித் போலவே கூறியுள்ளார்.

Advertisement