அஜித் தெலுங்கரா, மலையாளியா பல ஆண்டு குழப்பத்திற்கு அவரது சகோதரரே கொடுத்த விளக்கம். வைரலாகும் வீடியோ இதோ.

0
1581
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் ஏகே 61 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் சகோதரர் அனில் குமார் அளித்த பேட்டி வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அஜித் குடும்பம்:

அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் அஜித் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அஜித்துக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் அணில் குமார். இவர் jodi 365.com எனும் மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தல அஜித்தின் சகோதரர் அஜித்தை போலவே சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் உள்ளார். இவரும் அஜித்தை போல மிகவும் பிரைவேட்டான ஒரு நபர் தான். இதுவரை இவரை பற்றி பெரிதாக செய்திகள் வெளியானது இல்லை.

அஜித் சகோதரர் அனில் பற்றிய தகவல்:

அதே போல இணையத்தில் கூட இவரது புகைப்படங்கள் மிகவும் குறைவு தான். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரின் தம்பியாக இருந்தும் அந்த அடையாளத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அஜித்தை போல எளிமையாகவே இருந்து வருகிறார் அனீல். இந்நிலையில் அஜித்தின் சகோதரர் அனில் குமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு குடும்பமே ஆங்கிலம் பேசுவதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என் பெற்றோர்கள் கண்டிஷனோடு வளர்க்கவில்லை. எல்லாவற்றிற்குமே ஃப்ரீடம் கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

அஜித் சகோதரர் அனில் அளித்த பேட்டி:

அப்பா தமிழன்,அம்மா சிந்தி. கராச்சி பார்ட்டிஷன் போது அம்மா வந்துவிட்டார்கள். பின் அப்பாவோட வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கு வந்தோம். அதற்குப் பிறகு நாங்கள் சென்னை வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. சின்ன வயதிலிருந்தே ஆங்கிலத்தில் தான் பேசுவோம். என்னுடைய சகோதரர்கள், நண்பர்கள் எல்லோருமே ஆங்கிலத்தில் தான் பேசுவோம். சென்னையில் வளர்ந்து தமிழில் சரளமாக பேச முடியாது என்பது கஷ்டமாக இருந்தது. ஆரம்பத்தில் தமிழில் பேசும் போது எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். என்னுடைய பெரியம்மா ஒருமுறை தமிழில் நான் ஒரு வார்த்தை சொன்னதைக் கேட்டு பயங்கரமாக சிரித்தார்கள்.

அஜித் ஆங்கிலத்தில் பேச காரணம்:

அதனால் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அப்படியே வீட்டுக்குள் நாங்கள் எல்லோருமே ஆங்கிலத்தில் பேசினோம். அதுமட்டுமில்லாமல் பள்ளியில் முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேசுவோம். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தாலும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி செய்ய வேண்டும் என்பதால் வீட்டிலேயும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அப்படியே ஆங்கிலம் பழகிவிட்டது. தமிழில் பேச கொஞ்சம் சிரமமாகிவிட்டது. இருந்தாலும் தமிழில் அதிகம் பேச முயற்சி செய்கிறேன். அப்பா பிராமின். அதனால் நான்-வெஜ் சாப்பிட மாட்டார். அதற்காக எங்களையும் அப்படியே இருக்க வேண்டும் என்று சொன்னது கிடையாது. உங்களுக்கு பிடித்து இருந்தால் சாப்பிடுங்கள் என்று சொல்வார். அந்த அளவிற்கு ஃப்ரீடம் கொடுப்பார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement