தல அஜித் வாங்கியுள்ள புதிய கார்.! எத்தனை லட்சம் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

0
1292
Ajith

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் பைத்தியம் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பார்முலா ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.

ajithkumar

- Advertisement -

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு எந்த ஒரு நடிகரும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

மற்ற விடயங்களில் அஜித் குமார் எப்படியோ ஆனால்,கார் விடயத்தில் நடிகர் அஜித் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இருப்பினம் அவர் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியது கிடையாது. படப்பிடிப்பு தலங்களுக்கு சென்றாலும் அவர் எப்போதும் பயன்படுத்தும் வெள்ளை நிற ஷிப்ட் காரில் தான் செல்வார்.

-விளம்பரம்-

ajith volvo

இந்நிலையில் நடிகர் அஜித் வோல்வோ XC90 என்ற ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 90 லட்சம் வரை இருக்கும். கிட்டத்தட்ட 2000 cc ஆற்றல் திறன் கொண்ட இந்த கார், மணிக்கு 230 கி மீ வேகம் வரை சீறிப்பாயகூடிய திறன் உடையது. இதோ நடிகர் அஜித் புதிதாக வாங்கியுள்ள காரின் புகைப்படம்.

Advertisement