அஜித் படத்தில் கொரோனா விழிப்புணர்வு. வீடீயோவை வைராலக்கும் ரசிகர்கள்.

0
3576
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார். இவருடைய படங்கள் வரப்போகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடுவார்கள். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர்.

- Advertisement -

இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் தல. தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

சமீப காலமாகவே எந்த ஒரு விழிப்புணர்வு என்றாலும் தல அஜித்தின் படத்தின் காட்சிகளை தான் ட்ரெண்டிங் ஆகி வருகின்றார்கள். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித் அவர்கள் சுத்தமாக கை கழுவும் காட்சி ஒன்று இடம் பெற்று இருக்கும்.

-விளம்பரம்-
Image result for corona tamil nadu

தற்போது இந்த காட்சியை தான் ட்விட்டரில் ரசிகர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக வைத்து உள்ளார்கள். மேலும், இந்த வீடியோவை #LetsDoHandWashNow என்ற ஹாஸ்டேக்கின் மூலம் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

Advertisement