தமிழ் சினிமாவில் தல என்ற பெயருடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும்,இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்றும் திரைஉலகம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தான் அழைப்பார்கள். அதோடு நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.
ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும். அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று.அஜித் குடும்பத்துடன் இருக்கும் மாதிரி வரும் புகைப்படங்கள் எல்லாம் அவர் எடுப்பதில்லை. ரசிகர்கள் எடுத்து இணையங்களில் வெளியிடுவது தான் . மேலும் அஜித்தின் மகள் அனோஸ்கா பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்து வருகிறார்.
அதே போல அஜித் நடிப்பையும் தாண்டி பார்முலா ஒன் வீரர் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் நேற்று அஜித் மகள் பிறந்தநாளை ஒட்டி ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அதில் நடிகர் அஜித் தனது மகள் அனோஸ்காவிற்கு தான் ஒட்டிய கார்களின் புகைப்படங்களை காண்பித்து “”இது தான் டாடி கார் ” என்று கூறும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த வீடியோ தான் என்றாலும் தற்போது இந்த வீடியோ வருகிறது.