தலைக்கு இப்போவேணுனா சிவாவா இருக்கலாம்.!அப்போ யாருனு தெரியுமா.!

0
450
Siva-Ajith

அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படத்தை இயக்கியவர் என்று பெருமையை பெறுவர் இயக்குனர் சிவா. வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து மீண்டும் சிவாவுடனே என்று அறிந்ததும் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது. ஆனால், அதனை தகர்த்துள்ளார் சிவா. இதே போல அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ளார் சரண்.

அஜித்தை வைத்து சிவாவிற்கு முன்பாகவே நான்கு படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண். அவர் இயக்கிய ஒவ்வொரு அஜித் படமும் அஜித்தின் கேரியரில் முக்கியமான காலகட்டங்களில் வெளியானவை. அஜித்-சிவா போல அஜித் – சரண் கூட்டணி தொடர்ந்து படங்கள் பணிபுரியவில்லை. சரண் இயக்கிய முதல் படமான ‘காதல் மன்னன்’ அஜித்தை ஆக்சன் ஹீரோவாக காட்டிய முதல் படம்.

அஜித்தை காதல் மன்னனாக உருவகப்படுத்தி அதற்கு எனவே ஒரு பாடலையும் கொண்டிருந்தது அந்த படம். அந்தப் படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றன. அதில் இடம்பெற்ற ‘உன்னை பார்த்த பின்பு நான்’ என்ற பாடல் இன்றும் அஜித்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. 

மேலும் ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’ என்று அதன் பின்பு உருவான அஜித் என்ற நாயகனுக்கு அடித்தளம் அமைத்துத் தந்த திரைப்படம் ‘அமர்க்களம்’. அந்தப் படத்தில் அஜித்தின் உடையமைப்பும் செயினும் அப்போதைய இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இப்படி வியாபார ரீதியான வெற்றியிலும் சொந்த வாழ்க்கையிலும் அஜித்திற்கு ‘அமர்க்களம்’ மிகப்பெரிய திருப்பு முனையாக அணைந்தது.