எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அஜித் சொன்னார். பிரபல இயக்குனர் ஓபன் டால்க்.

0
43202
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் அஜித் அவர்கள் “ஜீ” படத்தில் விருப்பமில்லாமல் நடித்து உள்ளார் என்று இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, அஜித் சாருக்கு ஜீ படத்தின் கதையை கடைசியில் கடைசி நாள் தான் சொன்னேன். அதாவது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் அவரிடம் கதையை சொன்னேன். சார் எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என்று என்னிடம் ஓப்பனாக சொல்லி விட்டார். உடனே தயாரிப்பாளர் இது குறித்து பேசுகையில், படம் சம்மந்தமாக எல்லாம் தயாராகி விட்டார் நீங்கள் தொடருங்கள் என்றும் கூறினார்.

- Advertisement -

இதை நான் அஜீத் சாரிடம் சொன்ன போது அவர் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? என்று கேட்டார். நானும் முழு மனுதோடு ஓகே சார் என்று கூறிவிட்டேன். அப்படி தொடங்கியது தான் இந்த ஜீ படம் என்று கூறினார் இயக்குனர் லிங்குசாமி. 2005 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப் படம் தான் “ஜீ”. மேலும், இந்த படத்தில் அஜித் குமார், திரிஷா, சரண்ராஜ், விஜயகுமார், மணிவண்ணன், விசு உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

இந்த வலிமை படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வெற்றிகரமாக முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற உள்ளது. இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகியும், பிற நடிகர்கள் குறித்தும் எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement