தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து இயக்குனர் படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த இதையும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது.
இது ஒரு பக்கமிருக்க, படத்தில் அஜித் ஸ்டண்ட் செய்யும்போது கீழே விழுந்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் கமென்ட் போட்டிருந்தார்கள். இந்த நிலையில் இது குறித்து அஜித்தின் மருத்துவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித் குமார் எனக்கு ரொம்ப நெருங்கி நண்பர். வலிமை படத்தில் அவர் ஒரு இடத்தில் அடிபட்டு கீழே விழுந்து எழுந்து வந்தார். அஜித் எழுந்து வந்து இருந்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு தடவை இல்லை எத்தனையோ முறை இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
அஜித்தின் அறுவை சிகிக்சை:
பைக் ஸ்டன்ட் செய்யும் போது 4,5 முறை அடிபட்டிருக்கிறது. எத்தனையோ நாட்கள் அவர் வலியில் இருந்தது எனக்கு தெரியும். பலமுறை அடிபட்டு அஜித் வலியால் துடித்து இருக்கிறார். அதை நான் கூட இருந்தே பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த காட்சி ஓட மெசேஜ், பைக்கில் இருந்து கீழே விழுந்து எழுந்து வருவது கிடையாது. வாழ்க்கையில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து வரலாம் என்பதை தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர் ஒருமுறை மட்டும் இல்லை பலமுறை இந்த மாதிரி கீழே விழுந்து சர்ஜரி நடந்திருக்கிறது. மேலும், பைக் ஆக்சிடென்ட், ஸ்டண்ட் என்று பலமுறை அவருக்கு விபத்து ஏற்பட்டு தண்டுவடம், முதுகு, முட்டி, தோள்பட்டை, கழுத்து என பல இடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்த இடங்கள்:
கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் அவருக்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி அவர் சர்வை பண்ணுகிறார் என்றால் மருத்துவர்களை பாராட்டனும். அதே போல் அவருடைய தன்னம்பிக்கை தான் காரணம். இவ்வளவு விபத்து வலிகளை தாங்கி வந்திருக்கிறார் என்றால் இது சாதாரண மனிதனால் முடியாத ஒன்று. அதோடு அஜித்துக்கு கழுத்துப்பகுதியில் 2 எலும்புக்கு நடுவில் இருக்கிற எலும்பில் அழுத்தம் ஏற்பட்டு அங்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதே போல் முதுகு தண்டுவடத்தில் அவருக்கு ஒரு எலும்பு வளர்ந்து அது மாறுபட்டு பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல் கீழ் முதுகுலும் அவருக்கு உடைந்து பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
ரசிகர்களுக்காக போராடும் அஜித்:
இடுப்புப் பகுதியிலும் எலும்பு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இப்படி பல இடங்களில் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு பல அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை பண்ணி திருப்பியும் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்தார்கள். இதையெல்லாம் தாண்டி அவர் சர்வை பண்ணி வருகிறார் என்றால் அது கடவுளோட ஆசீர்வாதமும் அவருடைய தன்னம்பிக்கை, மன வலிமையும் தான் காரணம். நான் ஒரு மருத்துவராக அவருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறேன்.
வைரலாகும் வீடியோ:
ஆனால், அவர் ரொம்ப மன வலிமை, தைரியமான மனிதர். அவருடைய ரசிகர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஏதாவது பண்ண வேண்டும் என்று பண்ணுகிறார். அவரது தொழிலில் ரொம்ப டெடிகேஷன் ஆகவும் நேர்மையாகவும் இருப்பார். ரசிகர்களுக்காகவும் தன்னுடைய தொழிலையும் ரொம்ப நேசிக்கிறவர். அதனால்தான் இவ்வளவு பிரச்சனை சோதனைகளை கடந்து நடித்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.