இந்த காரை போய் தல கிட்ட கொடுத்து ரேஸ் ட்ராக்ல ஓட்ட சொல்லி இருகாங்க – மனுஷன் சும்மா இருப்பாரா சொல்லுங்க.

0
711
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நடிகர் அஜித் தனது நண்பருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சீரிப்பாய்ந்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் ரோட்டில் ஓட்ட வேண்டிய காரை ரேஸ் டிராக்கில் ஓட்டி அந்த காருக்கு நேர்ந்த கதி குறித்தும், பின்னர் அஜித் செய்த் உதவி குறித்தும் கூறியுள்ளார் புகைப்பட கலைஞரான ஜானி.

- Advertisement -

புகைப்பட கலைஞரான ஜானி சமீப காலமாக அஜித் குறித்து சில அரிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் அஜித் 10 ஆண்டுகளுக்கு முன்னர் NDTV அளித்த பேட்டியில் இவர்தான் கேமராமேனாக இருந்திருக்கிறார். அந்த பேட்டியை முடித்து விட்டு நடிகர் அஜித் ஜானியின் காரை(லீஸ் காரை) ரேஸ் டிராக்கில் ஓட்ட வைத்துள்ளார்கள். சாதாரண காரை ரேஸ் டிராக்கில் ஓட்டியதால் அந்த காரின் டயர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இதனால் காரின் டிரைவர் விவேக் என்பவர் மிகுந்த கவலையில் இருந்திருக்கிறார். ஆனால், விவேக்கின் போன் நம்பரை வாங்கி அதனை குறித்துக்கொண்டு இருக்கிறார் அஜித். ஒரு சில தினங்களிலேயே அவருக்கு போன்ற் செய்து அந்த காருக்கு 4 புதிய டயர்களை வாங்கி கொடுத்ததோடு அதற்கு சர்வீஸ் செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து இருக்கிறார் அஜித். இந்த தகவலை புகைப்பட கலைஞர், ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement