மேடம் படம் எப்படி இருக்கு ? விக்ரம் படத்தை பார்க்க வந்த ஷாலினியிடம் கேட்ட Anchor – சிரித்துக்கொண்டே Thug Life பதிலை கொடுத்த ஷாலினி.

0
685
shalini
- Advertisement -

கமலஹாசனின் விக்ரம் படத்தை ஷாலினி மற்றும் அவருடைய மகள் அனோஷ்கா பார்த்திருந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Kamal's Vikram Movie First Look Poster Released Fans Cant Keep Calm

பின் இவர் ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. இப்படி தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் வசூல்:

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படம் குறித்து பலரும் நல்லவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் விக்ரம் படம் குறித்து நல்ல விதமாக கூறி வருகின்றனர்.

வைரலாகும் ஷாலினி அஜித்- அனோஷ்கா புகைப்படம்:

இந்த நிலையில் கமலஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க பல பிரபலங்கள் திரையரங்கிற்கு வந்து இருக்கிறார்கள். அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா இருவரும் முதல் நாளே தியேட்டருக்கு வந்து விக்ரம் படத்தை பார்த்துள்ளனர். அவர் படத்தை பார்க்க உள்ளே செல்லும் போதே படம் எப்படி இருக்கிறது என்று Anchor ஒருவர் கேட்க ‘நாங்கரெண்டு பேருமே படத்த பாக்கல’ என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

Advertisement