பேருந்தை நிறுத்தி அஜித் ரசிகர்கள் செய்த அலம்பல்.! இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்.!

0
713
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்பத்திற்காக அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பஸ்ஸை மடக்கி அமர்க்களம் செய்துள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த மாதம் 1 ஆம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள் சென்றது. அதனை அஜித் ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடியதோடு அன்னதானம், நல்லத்திட்ட உதவிகள் என்று செய்து அசத்தினர். ஆனால், இன்னும் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடட்டம் ஓய்ந்த பாடில்லை.

- Advertisement -

சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் தனியார் பேருந்தை மடக்கி பாலபிஷேகம் செய்து அஜித் வாழ்க என்று கோஷமிட்டனர். என்னடா என்று வேடிக்கை பார்த்த பலர் அந்த பஸ்ஸில் அஜித்தின் புகைப்படம் இருப்பதால் தான் இப்படி பாலபிஷேகம் செய்துள்ளனர்.

Advertisement