தல தலனு உயிரே விட்டான்,இப்போ அவங்களா வருவாங்க – துணிவு படம் பார்க்க சென்று இறந்த இளைஞரின் குடும்பத்தினர் கதறல்.

0
350
Ajith
- Advertisement -

சென்னயில் நடிகர் அஜித் நடித்த “துணிவு” படத்தை பார்க்க சென்ற அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்ற தகவல் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. போனி கபூர் தயாரித்து, வலிமை, சதுரங்காக வேட்டை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் “துணிவு” படம் `இன்று தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” பாடத்துடன் ஒன்றாக வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

துணிவு மற்றும் வாரிசு படம் இன்று வெளியாகும் என தெரிவித்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்ணனிருந்தே இரு நடிகர்களுடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அதோடு கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, மாலை போடுவது என இருந்து வந்தது. குறிப்பாக பெங்களூருவில் ரசிகர் ஒருவர் 7.35 லட்சம் செலவு செய்து அஜித்தின் மிகப்பெரிய கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து அழகுபார்த்தனர்.

- Advertisement -

அதிக விலைக்கு டிக்கெட்டுகள் :

மேலும் தீவிர அஜித் ரசிகர்கள் எப்படியாவது “துணிவு” படத்தை முதலில் பார்த்து விட வேண்டும் என்ற ரசிகரின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு வெளிச்சந்தைகளில் 2 ஆயிரம், 3ஆயிரம் என டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இப்படிபட்ட நிலையில் தான் இன்று அதிகாலை 1 மணிக்கு “துணிவு” திரைப்படம் வெளியானது, அதோடு “வாரிசு” திரைப்படம் காலை 4 மணிக்கு வெளியாகியது. இதனால் நேற்று இரவு திரையரங்கங்கள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இளைஞர் மரணம் :

இந்த நிலையில் அஜித் படம் காலாம் காலமாக வெளியாகி வரும் ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி அங்குள்ள அஜித் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன, இதனால் அங்கு போலீசார் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பதர்டடமான சூழ்நிலை நிலவியது. இப்படி இந்த நிகழ்வு முடியும் முன்னரே சென்னை சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியது.

-விளம்பரம்-

சோகத்தில் குடும்பத்தினர் :

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டைனர் லாரி மீது ரசிகர் பரத்குமார் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு நிலையில் அந்த இளஞரின் சித்தி ரசிகன் ரசிகன்னு உயிர விட்டுட்டான். சின்ன பசங்க எல்லார் கால்லையும் விழுறேன் இப்படி எல்லாம் பண்ணாதீங்க என்று கண்ணீர் மல்க பேசி இருப்பது மனதை உலுக்கி இருக்கிறது.

Advertisement