விஸ்வாசம் போஸ்டர் மீது சாணி எரிப்பு.! அஜித் ரசிகர்கள் 9 பேர் கைது.!

0
537
Viswasam-Trailer

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தை தான் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தேனியை மையப்படுத்திய கதையாகும். இதையொட்டி பல அஜித் ரசிகர்கள் தேனியின் பல பகுதிகளில் சுவரில் ‘விஸ்வாசம்’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக போஸ்டர் ஒட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் சாணி அடித்தது யார் என்று கேட்டு ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஜெயமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்களான அஜித்குமார், பாலமுருகன், விஜய் உள்ளிட்ட 10 ரசிகர்கள் மீது ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தேனி போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘சர்கார்’ படத்தின் 50 வது நாளின் போது இடைவெளியில் ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement