ரஜினி மகளை காயப்படுத்திய அஜித் ரசிகர்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த பதிலடி-வைரலாகும் வீடியோ

0
400
- Advertisement -

ரஜினியின் லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ஞ்சில் மாஸாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து பல படங்களில் ரஜினி கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

லால் சலாம் படம்:

மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா எடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

லால் சலாம் இசை வெளியீட்டு விழா :

இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.
பின் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காக்கா- கழுகு கதை, விஜய் குறித்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இவரை அடுத்து விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாங்கள் லால் சலாம் படம் குறித்த அப்டேட்டுகள் எல்லாம் வெளியிட்டால் எங்களுக்கு வரும் ரிப்ளை எல்லாம் தலைவர் 171 படத்தின் அப்டேட் போடுங்க.

விழாவில் ஐஸ்வர்யா சொன்னது:

விடாமுயற்சி படத்தினுடைய அப்டேட் போடுங்க என்று தான் சொல்வார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது நம்ம லிஸ்டிலேயே இல்ல போல என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. படம் உருவான பிறகு இப்ப சொல்கிறேன் என்னுடைய படம் உங்களுடைய லிஸ்டில் இருக்கும் என்று மாசாக பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஐஸ்வர்யாவின் முயற்சிக்கு பாராட்டை தெரிவித்தும் வருகிறார்கள்.

விடாமுயற்சி படம்:

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் ஆக இருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கான அப்டேட்க்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement