இயக்குனர் சிவாவிடம் அஜித் ரசிகர்கள் வைத்த 5 கோரிக்கைகள் என்ன தெரியுமா !

0
3628
ajith - siva

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தல அஜித். திரையில் அவருடைய மாஸ் ஆக்சனை ரசிக்காத ஆட்களே இல்லை எனலாம். சினிமாவில் பல தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.
Ajith பில்லா, மங்காத்தா என மாஸ் படங்களை கொடுத்து வந்த அஜித் அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செல்லாததால் வீரம் படத்தில் இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவுடன் கை கோர்த்தார். அதுவரை அவர் செய்து வந்த படங்களை விட இது அவரை சற்று வித்யாசமான கேரக்டரில் காட்டியது, மேலும் , சால்ட் அன்ட் பெப்பரிலும் கலக்கினார் அஜித்.

விவேகம், படம் வெளியாகும் முன்பு ஹாலிவுட் தரத்தில் இருக்கும் , படம் வேற லெவலில் எடுக்கப்பட்டுள்ளது என நிறைய டைலாக்குகள் சிவா தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியான பின்பு அஜித் ரசிகர்களாலேயே படம் விமர்சிக்கப்பட்டது தான் மிச்சம்,
Ajith

இந்நிலையில் 4ஆவது முறையாக அஜித்-சிவா கூட்டனி உறுதியாகியுள்ள வேலையில் அஜித் ரசிகர்கள் கண்ணியமாக மேற்குறிப்பிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து சிவாவுடன் சிறிது இடைவெளிவிட்டு படம் எடுக்கலாம் என சமூக வலை தளங்களில் கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது…

(1) தலயை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்த்து போர் அடித்துவிட்டது, தயவு செய்து அடுத்த சில படங்களுக்கு சால்ட் அண்ட் பெப்பர் வேண்டாம்

(2) மாஸ் வசங்கள் ஒவராக உள்ளது, மேலும், நடிகரைப் புகழும் வில்லன் வசங்கள் அறவே வேண்டாம்

siva

(3) ஹாலிவுட் படட்தில் கூட சேசிங்கில் சென்டிமென்ட் காட்சிகள் வைக்க மாட்டார்கள் , அது போன்ற காட்சிகள் முற்றிலுமாக வேண்டாம்

(4) வில்லன் கதா பத்திரம் மிக அழுத்தமாக கதாநாயகனுக்கு இணையாக இருக்கம்படி வையுங்கள்,

(5) 3 படத்திலும் அது மிஸ் மூன்று படத்திலும் ஒரே மாதிரியாக இழுத்து பேசி அழுத்து போய்விட்டது, அது போன்று ஒரே மேனரிசம் இந்த படத்திலும் வேண்டாம் என அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தரிவித்து வருகின்றனர்.