அஜித் சும்மா கை அசைச்சதுக்கே இப்படியா..! நேரில் பார்த்து அதிர்ந்து போன முன்னணி நடிகர்கள்.!

0
852
Ajith

தமிழ் சினிமாவில் அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரியும். அதே போல அவரது ரசிகர்களும் அவரின் சொல்லுக்கு கட்டுபட்டவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையை குறித்து பிரபல நடிகர்களான அருண் விஜய் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் என்ன கூறியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

ajithaction

- Advertisement -

அருண் விஜய்

நடிகர் அருண் விஜய், நடிகர் அஜித் நடித்த “என்னை அறிந்தால் ” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் போது நடந்த சம்பவத்தை ஒன்றை நினைவு கூறியுள்ளார். அதில் அஜித்துடன் என்னை அறிந்தாள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது “அதாரு அதாரு” பாடலை ஒரு கம்பெனி முன் இரவில் நடத்தினோம். அப்போது ரசிகர்கள் பல பேர் கத்திக்கு கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து அஜித் அவர்கள் கையை அசைத்து அமைதியாக செல்லுங்கள் என்று கூறியதும் ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Actor Arun vijay

தம்பி ராமைய்யை

நடிகர் தம்பி ராமைய்யா அஜித்துடன் “வீரம், வேதாளம் ” போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தம்பி ராமைய்யா, அஜித் குறித்து பேசுகையில், நடிகர் அஜித்திற்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு சமையம் படப்பிடிப்பின் போது அஜித்தை பார்க்க வீட்டு மாடியில் நின்று கொண்டு ரசிகர்கள் அதிக நேரம் அஜித்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரசிகர்களை பார்த்து கையை அசைத்துவிட்டு அனைவரும் அமைதியாக செல்லுங்கள் என்று கூறியதும் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

thambi ramiyya

பொதுவாக அஜித் ரசிகர்கள் தல என்றால் அதிகப்படியான மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள் என்று பலர் சொல்லித்தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தற்போது அவரது கையசைவிற்கேஅவரது ரசிகர்கள் இவ்வளவு மரியாதை அளிப்பார்களா என்று அனைவரும் வியந்து வருகின்றனர்.

Advertisement