விஜய் விருது விழாவில் கோபத்தை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்..! – காரணம் இதுதான்..? – புகைப்படம் உள்ளே

0
1294
Actor Ajith

விஜய் டிவியில் 9 ஆண்டுகள் நடைபெற்று வந்த ‘விஜய் அவார்ட்ஸ்’ கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறமால் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 3) இந்த விழாவின் 10 ஆண்டு நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் பங்கு பெற்றனர்.
ajith

இந்த விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி தனுஷ், இயக்குனர் பாலா, நடிகை நயன்தாரா போன்ற பிரபலங்கள் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் எப்போதும் பங்கு பெரும் விஜய், ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த முறை பங்குபெறவில்லை.

- Advertisement -

அதே போல எந்த பொது நிகழ்ச்சிக்கும் பங்குபெறாத அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் இந்த விழாவில் பங்குபெறவில்லை. ஆனால் அஜித் வரவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த அஜித் ரசிகர்கள் படு மாஸ் காட்டியுள்ளனர்.
ajith

இந்த விழாவிற்கு வந்த அஜித் ரசிகர்கள் சிலர் கையில் ஒரு சில பதாகைகளை எடுத்து வந்திருந்தனர். அதில் “விருதுகள் தேவை இல்லை! தல என்ற ஒரு சொல்லலே போதும் ! ” என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அஜித் மீது அவரது ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று புலப்படுகின்றது.

-விளம்பரம்-
Advertisement