அஜித் ரசிகர்கள் தாமரையை மலர செய்வார்கள்.! தமிழிசை ஏன் அப்படி சொன்னார் தெரியுமா.!

0
917
tamilisai
- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், மறைமுறையாகவும் ஆதரவு தெரிவித்ததே இல்லை. இந்நிலையில் அஜித்தின் 100 கும் மேற்பட்ட ரசிகர்கள் பா ஜ கவில் இணைந்துள்ளனர்.

-விளம்பரம்-

நேற்று (ஜனவரி 20) பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார். குறிப்பாக பாஜகவில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களை அவர் புகழ்ந்து பேசினார். திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர்.

இதையும் படியுங்க : அரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா..? தமிழிசையை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த் 

- Advertisement -

அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் பா ஜ கவின் நிலை என்ன என்பது தெரியும். போதாதா குறைக்கு ரஜினி, பா ஜ கவில் இணைவார் என்று எதிர் பார்த்து வந்த நிலையில் அதுவும் நடக்கும் போனது. தற்போது அஜித் ரசிகர்கள் பா ஜ கவில் இணைந்துள்ளனர். அப்போ அஜித் ரசிகர்கள் பா ஜ கவிற்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-

Advertisement