அஜித்தை சுபாஷ் சந்திரபோஸாக மாற்றிய திருச்சி அஜித் ரசிகர்கள் – வைரலாகும் போஸ்டர் (என்னடா இது சுபாஷ் சந்திரபோஸுக்கு வந்த சோதன)

0
472
ajith
- Advertisement -

திருச்சியில் அஜித்துக்காக ரசிகர்கள் பேனர் வைத்து செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏப்ரலில் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அஜித் நடிக்கும் படங்கள்:

மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

துப்பாக்கி சுடும் போட்டி:

சமீபத்தில் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து அஜித் கொண்டு இருந்தார். இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று இருந்தது. இந்த போட்டியில் 1,300 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. அஜித் திருச்சிக்கு வருவதை அடுத்து ரசிகர்கள் பலர் ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள். ஆயுதப்படை வளாகத்தின் முன்பு ரசிகர்கள் கூட்டம் குவிந்து இருந்தது.

-விளம்பரம்-

பேனர் ஒட்டிய அஜித் ரசிங்கர்கள்:

பின் அஜித் தன் ரசிகர்களை பார்த்து கை அசைத்து நன்றி தெரிவித்து இருந்தார். பின் போட்டி முடிந்தவுடன் அஜித் அவர்கள் சென்னை திருப்பினார். அதோடு இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் அவர்கள் 4 தங்கம், 2 வெண்கலம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அஜித் திருச்சிக்கு வருகை தந்ததை அடுத்து ரசிகர்கள் பேனர் ஒட்டி செய்திருக்கும் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் பட விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

அஜித்தின் சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம்:

அதாவது, சுபாஷ் சந்திர போஸ் உடையில் அஜித்தின் புகைப்படத்தை தயார் செய்து திருச்சி மாநகருக்கு வருகை தந்த நிகழ்கால சுபாஷ் சந்திரபோஸ் என்று திருச்சி அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து இருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், என்னையா இது! சுபாஷ் சந்திர போஸுக்கு வந்த சோதனை என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement