என் வீட்டுக்கு வந்து பெண் கேட்ட அப்போ – தனது மருமகன் அஜித் குறித்து நெகிழ்ந்த ஷாலினியின் தந்தை பாபு.

0
1440
Shalini
- Advertisement -

அஜித்தை குறித்து அவருடைய மாமனார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை விட்டு விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த அமர்க்களம் படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய காதல் கதை தமிழ்நாடே அறிந்தது தான். தற்போது அஜித் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

- Advertisement -

அஜித் மாமனார் அளித்த பேட்டி:

இந்த நிலையில் அஜித் குறித்து ஷாலினின் அப்பாவும், அஜித்தின் மாமனாருமான ஏ எஸ் பாபு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், அமர்க்களம் ஷூட்டிங்கில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்பி இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு அஜித் வந்து, உங்க மகளை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க என்று நேரடியாகவே கேட்டார். இதில் ஷாலினிக்கும் விருப்பம் இருக்கு என்று தெரிந்த பிறகு தான் பிள்ளையோட விருப்பம் தான் முக்கியம் என்று இவர்களுடைய திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டோம்.

அஜித்-ஷாலினி திருமணம்:

அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஜாதகம் பார்த்தபோது பத்து பொருத்தமும் சூப்பர் என்று சொன்னார்கள். அவங்க சொன்னது உண்மை தான். அப்படி ஒரு அன்பான ஜோடி. அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை. இன்னொரு மகன் தான். அஜித் எப்பவும் ஸ்பீடு தான். குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்து கல்யாண தேதியை முடிவு செய்தார். அன்னைக்கு எப்படி நிச்சயம் ஆனபோது சந்தோஷமாக பேசி சிரிச்சமோ இப்ப வரைக்கும் அதே மாதிரி இரண்டு குடும்பமும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம்.

-விளம்பரம்-

அஜித் குறித்து சொன்னது:

அஜித் இரண்டு குடும்பத்தையும் அப்படித்தான் தாங்குகிறார். வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதில் ஆரம்பித்து சாப்பாடு பரிமாறும் வரை அவர் தான் செய்வார். வேலையாட்களை குடும்ப உறுப்பினர் போல நடத்துவார். மருமகனின் அந்த குணம் மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும். நமக்கும் அவரைப் போல பாசிட்டிவோட எல்லோரும் மீதும் அன்பாக இருக்க தோணும் என்று பெருமிதமாக பேசியிருந்தார்.

அஜித் நடிக்கும் படம்:

மேலும், கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல சாதனை படைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது

Advertisement