முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள அஜித் – காரணம் இந்த நடிகர் தான்.

0
1238
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான விசுவாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி. அடைந்தது அதேபோல சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. விசுவாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பணிகள் தொடங்கி ஓராண்டு மேல் ஆகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே மாதம் 1ஆம் தேதி அதாவது அஜித் பிறந்த நாளில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
பரோஸ் பட பூஜை

இந்த நிலையில் நடிகர் அஜித், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இயக்க இருக்கும் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். ‘பரோஸ் – நிதி காக்கும் பூதம்- 3டி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் மூலம் 15 வயதில் இசையமைப்பாளராகியிருக்கிறார் லிடியன். இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பல வெளிநாட்டு நடிகர்கள் நடிக்கயிருக்கும் இப்படத்தில் முக்கியமான கேரெக்டரில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறனும் நடிக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தில் அஜித்தும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இருக்கிறார் ஆனால் இதுவரை ஒரு மலையாளப் படத்தில் கூட நடித்தது கிடையாது. அவ்வளவு ஏன் இதுவரை எந்த ஒரு மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட நடிகர் அஜித் நடித்தது கிடையாது. அப்படி இருந்தும் இத்தனை ஆண்டுகள் கழித்து அஜித் மலையாள படத்தில் நடிக்க என்ன காரணம் என்று பலரும் குழம்பி இருக்கிறார்கள்.

பரோஸ்

உண்மையில் நடிகர் மோகன்லால் அஜித்தை இந்த படத்தில் நடிக்க விரும்பி கேட்டுக்கொண்டதால் உச்ச நடிகர் என்பதாலும் நட்புக்காகவும் இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம் ஆனால் இந்த படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் என்ன இந்த படத்தில் நடிகர் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் இல்லை ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் என்பது பற்றி விரைவில் தகவல் வெளியாக இருக்கிறது

-விளம்பரம்-
Advertisement