தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் நேரடியாக அரசியலுக்கு வராத போதிலும் அவரது படங்களில் அரசியல் சார்ந்த கதைகளும் அரசியல்வாதிகளை எதிர்க்கும் வசனங்களும், அவரது சமீபத்திய படங்களில் அதிகம் இடம் பெற்று இருப்பதை நம்மால் காண முடியும். ஆனால், அஜித் படங்களில் கூட அரசியல் சம்பந்தப்பட்ட எந்த காட்சிகளை வைத்து கிடையாது நடித்ததும் கிடையாது.
இந்த நிலையில் அஜித் முதன்முறையாக ஒரு அரசியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்று நம்புகிறமான தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்தின் அடுத்தப் படத்தையும் இவர்தான் தயாரிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், அந்த படத்தை வினோத் தான் இயக்குகிறார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் என்பது தெரியும். ஆனால், இந்த படத்தை தனது சொந்த கதையை வைத்து இயக்குவதாக தான் முதலில் வினோத் திட்டமிட்டிருந்தார். ஆனால் போனிகபூர் தான் பிங்க் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த நிலையில் வினோத் – போனிகபூர் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் வினோத் ஒரு அரசியல் கதையைத்தான் எடுக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அதுமட்டும் உறுதியானால் அது அஜித் முதன் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.