இந்த மாதிரி முட்டாள்களை பின் தொடராதீர்கள் – TTF வாசனை வெளுத்து வாங்கிய அஜித்தின் தோழி.

0
806
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறை சென்ற TTF வாசன் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் ஒருவர் இனி பைக் ஓட்ட முடியாது என்பதால் இனி படத்தில் முழு கவனம் செலுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன் பைக்கும் ஓட்டுவேன் படத்திலும் நடிப்பேன். பேஷனை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர் உங்களுடைய ஓட்டுனர் உரிமை தான் ரத்து செய்து விட்டார்களே அப்போது எப்படி பைக் ஓட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த ttf வாசன் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், மேல்முறையீடு ஏதாவது செய்யலாம், என்னுடைய கை போனதை விட லைசென்ஸ் போனது தான் கண் கலங்கி விட்டேன் என்று கூறி இருந்தார். TTF வாசன் மீண்டும் பைக் ஓட்டுவார் என்று சொன்னதால் இதனால் TTF வாசன் கன்னிஸ்கள் குஷியானார்கள். இப்படி ஒரு நிலையில் உள்நாட்டில் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும் விபத்து ஏற்படுத்தியதற்காக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டவர் சர்வதேச லைசன்ஸ் இருப்பதை காட்டி இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் பைக் ஓட்ட முடியாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜாமினில் வெளியே வந்த வாசன், முதன் முறையாக தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அவர் ‘சிறையில் நான் பெரிதாக கஷ்டப்படவில்லை. எனக்கு அங்கே இருந்தவர்கள் உதவி செய்தார்கள். மேலும் நான் சிறையில் இருந்த நாட்களில் தான் நான் மூன்று வேளை நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்கினேன். இதற்கு முன்பெல்லாம் நான் இப்படி இருந்தது கிடையாது.

எப்போதும் வேலை வேலை என்று சரியாக சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் பத்திரிகையாளர்களிடம் இனி நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கி வெளிநாட்டில் தான் பைக் ஓட்டுவேன் என்று சொன்னேன் அதற்கான வேலைகளை விரைவில் நான் துவஙகுகுவேன் என்றும் கூறினார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அஜித்தின் பைக் ரேஸ் தோழியும் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவருமான அலிஷா அப்துல்லா இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் சாலைகளில் தவறான செயல்களை செய்து விட்டு தற்போது பேயிலில் வந்திருக்கும் நபருக்காக தான் இந்த வீடியோ. ஏதோ பைக் தானாக வீலிங் செய்ததாக அவர் கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அது மிகவும் அதிக எடை கொண்ட மற்றும் அதிக வேகமாக செல்லும் பைக்.

நீங்கள் வீலிங் செய்யாமல் அது அப்படியெல்லாம் வீலிங் ஆகி விடாது. தவறை செய்துவிட்டு எப்படியாவது தப்பித்து விடலாம் என்று அவர் நினைக்கிறார். இது பைக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தவறான உதாரணமாக இருக்கும். அவருடைய இந்த செயல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஜாமீனில் வெளியில் வந்தும் தனது தவறை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயத்துடன் தப்பித்து விட்டார். ஆனால் இப்படி செய்வது அவரை மட்டும் பாதிக்காமல் சாலையில் செல்பவர்களையும் பாதிக்கும் உங்களுக்கு ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான தளத்தில் செய்யுங்கள். ஆனால் சாலையில் இது போன்ற சாகசங்களை செய்யாதீர்கள் அது உங்களுக்கும் ஆபத்து மற்றவர்களுக்கும் ஆபத்து எனவே இது போன்ற முட்டாள்களை தயவு செய்து பின் தொடராதீர்கள் என்று காட்டமாக பேசியிருக்கிறார்

Advertisement