கஜா புயல் பாதிப்பு,அஜித் அளித்த நிதி..!தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..!

0
571
Ajith

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.

இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.இதைத்தொடர்ந்து 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்தது.

Ajithfund

ஆனால், அல்டிமேட் ஸ்டார் அஜித் மட்டும் இன்னும் எந்த நிதியுதவியையும் அளிக்கவில்லை என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது