நான் என்ன கொலைகாரனா, இல்ல கொள்ளக்காரனா ? – வைரலாகும் அஜித்தின் வீடியோ. செம காலாய் போங்க.

0
219
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிகர் மட்டும் அல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மிகவும் ஆர்வமிக்க ஒரு ரேசர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான் அதிலும் காரைவிட இவருக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பைக்கில் பல்வேறு நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் உடைய எதாவது ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதை தொடர்ந்து லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கும் பைக் சாகச பயணங்களை மேற்கொண்டுவந்தார் அஜித்.

- Advertisement -

அஜித்தின் லடாக் ட்ரிப் :

மேலும், அந்த பயணத்தின் போது இவருடன் ஏகே 61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் பைக் ரைடு செய்திருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள புத்தர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், தற்போது பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதே போல அஜித் லடாக்கில் பைக் பயணம் செய்து வருகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் அங்கு பைக் பயணம் செய்த பல அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கி வருகின்றனர்.

அஜித்தை சந்தித்த ரசிகர் :

அப்படி ஒரு சில ரசிகர்களுக்கு அந்த அதிர்ஸ்ட்டம் கிடைத்துவிடுகிறது. இந்த நிலையில் அஜித்தை சந்தித்த ரசிகர் ஒருவரிடம் அஜித் ஜாலியாக கலாய்த்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் லடாக் பயணத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அஜித்தை கண்டதும் அவரிடம் பேச அவரை வீடியோ எடுத்தவாரே அவரை நோக்கி சென்று இருக்கிறார். அவரிடம் அஜித்தும் பேச துவங்குகிறார்.

-விளம்பரம்-

பங்கமாக கலாய்த்த அஜித் :

அப்போது அஜித் அந்த ரசிகரிடம் ‘எங்க இருந்து வரீங்க என்று கேட்க அந்த ரசிகரோ ‘நாங்கள் கோயம்பத்தூரில் இருந்து வருகிறோம் சார், 3 நாளா உங்களை தேடிக்கொண்டே இருக்கிறோம்’ என்று சொல்ல ‘தேடிகிட்டு இருக்கீங்களா, நான் என்ன கொலைகாரனா, கொள்ளைக்காரனா’ என்று அந்த ரசிகர்கரை கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அஜித் 61 நிலை :

வலிமை படத்தை தொடர்ந்து தற்போது அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61 படம் முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement