7 மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள்.. ! அதிகாலை 5 மணிக்கு அஜித் செய்த அசத்தல் விஷயம்..!

0
362
ajithkumar

இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்றால் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் “விஸ்வாசம் ” படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இயக்குனர் சிவா இயத்தில் உறவாகி வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

Ajith-with-fans

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் நடிகர் அஜித் இந்த படத்தின் டப்பிங் வேளைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று இரவு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டூடியோ ஒன்றிற்கு சென்றுள்ளார் அஜித். அஜித்தின் வருகையை அறிந்த ரசிகர்கள் டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளனர்.

நேற்று இரவு முதலே ரசிகர்கள் டப்பிங் ஸ்டூடியோவிற்கு வெளியே அஜித்தை காண கா த்திருந்துள்ளனர். ஆனால், டப்பிங் முடிய அதிகாலை 5 மணிக்கு மேல் ஆகியுள்ளது. பின்னர் டப்பிங் முடிந்து வீட்டிற்கு கிளம்பியுள்ளார் நடிகர் அஜித்.அஜித் காரில் செல்வதை பார்த்துள்ள ரசிகர்கள் காருக்கு பின்னாலேயே ஓடியுள்ளார். அதனை பார்த்துள்ள அஜித் காரை பின்னால் எடுக்க சொல்லி இருக்கிறார்.

பின்னர் ரசிகர்களிடம் என்னவென்று விசாரித்த அஜித்திடம், உங்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள தான் நீண்ட நேரம் கத்துக்ககொண்டிருக்கிறோம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். அதற்கு அஜித். இப்போது தான் டப்பிங் முடித்துவிட்டு வந்தேன் மிகவும் களைப்பாக இருக்கிறேன். அதனால் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள இயலாது. வேண்டுமானால் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு ரசிகர்களும் அதுவே போதும் சார் என்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.