தமிழ் சினிமா திரை உலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். நடிகர் ரோபோ சங்கர் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர் ஆவார். மேலும், இவர் தமிழ் திரைப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பரவலாக அறியப்பட்டார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கூட இருந்திருக்கிறார். இதன் மூலம் தான் ரோபோ சங்கர் அவர்ளுக்கு சினிமா துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், இவர் வாயை மூடி பேசவும், மாரி, புலி, மாயா, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விசுவாசம். அஜித்– நயன்தாரா நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு, யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும்,இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றும் ‘பிளாக் பஸ்டர்’ படமாகவும் அமைந்தது. மேலும், இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் அவர்கள் நடித்து இருந்தார். மேலும், ரோபோ சங்கர் அவர்கள் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தல அஜித்திடம் என் குடும்பத்துடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார். உடனே நம்ம தலயும் சரி என்று கூறி உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்த தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், ரோபோ சங்கர் அவருடைய நண்பர் ஒருவருக்கு இதை பகிர்ந்துள்ளார்.
இதையும் பாருங்க : அருண் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா. அசிங்கபடுத்திய அருண் விஜய்.
அதுமட்டும் இல்லாமல் அவருடைய நண்பர் ஹைதராபாத்தில் உள்ளார். அவர் தல அஜித்தின் தீவிர ரசிகரும் ஆவார். அதனால் அந்த ரசிகர் எப்படியாவது நான் தலயை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ரோபோ சங்கரிடம் கேட்டு கொண்டார்.மேலும்,இது சம்பந்தமாக ரோபோ சங்கரும் தல அஜித்திடம் அனுமதி கேட்டார். பின் ரோபோ சங்கர் அந்த ரசிகரை தல அஜித்தை சந்திக்க வைத்தார். அஜித் பழகும் விதம், பேசும் விதம் எல்லாருக்குமே தெரியும். அஜித் எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்வார். இந்நிலையில் அஜித் பழகியதை பார்த்து அந்த ரசிகர் வியப்பில் ஆழ்ந்து போனார். அதுமட்டுமில்லாமல் அஜித் உடைய இந்த நல்ல குணத்திற்காக ஒரு பரிசும் கொடுத்து உள்ளார்.
அந்த பரிசு அஜீத் மற்றும் அவரது மகள் இருப்பது போல ஒரு புகைப்படம். மேலும், அந்த புகைப்படத்தை அஜித் அவர்கள் அவருடைய வீட்டில் மாற்றி வைத்து உள்ளதாக அவர் பதிவில் தெரிவித்து இருந்தார். மேலும், உண்மையிலேயே அஜித் மாதிரி ஒரு உன்னதமான மனிதனைப் பார்க்கவே அபூர்வம் என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருகின்ற அஜித் அவர்கள் உண்மையாகவே அவர் ஒரு எளிமையின் சிகரம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையிலும், நடைமுறையிலும் எளிமை பயன்படுத்துவர்.