அஜித்தின் குட் பேட் அக்லி படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், நேற்று இந்த படத்தினுடைய முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்:
அதாவது, முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் 28.5 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 21.8 கோடி வசூல் செய்தது. அதேபோல் கர்நாடகாவில் மூன்று கோடி வசூல் செய்திருக்கிறது. விடாமுயற்சி படத்தை விட குட் பேட் அக்லி படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. விடாமுயற்சி படம் முதல் நாளில் இந்திய அளவில் 22 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் விஜயின் கோட் படத்தை குட் பேட் அக்லி நெருங்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வசூல் விவரம்:
உலக அளவில் கோட் படம் 126 கோடி வசூல் செய்தது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 35 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், கோட் படத்தை விட 14 கோடி குறைவாக தான் குட் பேட் அக்லி படம் வசூல் செய்திருக்கிறது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக பிரதீப் ரங்கநாதரின் டிராகன் படம் தான் இருக்கிறது. இந்த சாதனையை குட் பேட் அக்லி முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் கதை:
படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால்
அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து
தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






