இயக்குனராக களமிறங்க இருக்கும் விஜய் மகனுக்காக அஜித் செய்துள்ள உதவி – என்ன தெரியுமா? என்னா மனுஷங்க.

0
512
- Advertisement -

நடிகர் விஜய்யின் மகனுக்காக அஜித் செய்திருக்கும் உதவி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் நடிப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரைபை பெற்றிருக்கிறது. சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவருடைய மகன் தான் தமிழ் சினிமாவின் தளபதி விஜய். பல ஆண்டு காலமாக இவர் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

- Advertisement -

விஜய் குறித்த தகவல்:

இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் லைலா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் தமிழ் சினிமா உலகில் களமிறங்க இருக்கிறார். ஏற்கனவே சஞ்சய் அவர்கள் சினிமா துறைக்கு தேவையான படிப்பை தான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

விஜய் மகன் இயக்கும் படம்:

இவர் கூடிய விரைவில் சினிமாவிற்கு வருவார் என்ற செய்திகள் எல்லாம் வந்திருந்தது. அந்த வகையில் தற்போது விஜயின் மகன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆனால், இது உண்மையா? என்று தெரியவில்லை. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் சஞ்சயின் படத்திற்கு பிஆர்ஓவாக சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அஜித் செய்த செயல்:

சுரேஷ் சந்திரா வேற யாரும் இல்லை நடிகர் அஜித்குமார் சம்பந்தமான செய்திகளை எல்லாம் விளம்பர தூதராக வெளியிட்டு வருபவர். இவர் அஜித்திற்கு மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களையும் விளம்பரப்படுத்தும் பி ஆர் ஓவாக இருக்கிறார். தற்போது இவரை தான் விஜயின் மகன் படத்திற்கு பிஆர்ஓவாக லைக்கா நிறுவனம் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதுகுறித்து சுரேஷிடம் லைக்கா நிறுவனம் பேசிய போது முதலில் தயங்கி இருக்கிறார். பின் அஜித்திடம் சென்று கேட்டபோது அஜித் தயங்காமல் இந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா.

ரசிகர்கள் பாராட்டு:

பின் அஜித்தும் தொலைபேசி மூலமாக விஜய்யின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், அஜித் நல்ல மனுஷன்பா என்றெல்லாம் ஹாஸ்டாக்குகளை உருவாக்கி அவரை பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம், விஜய் தன்னுடைய மகன் படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவருடைய தாய் சங்கீதா மூலம் தான் லைக்கா நிறுவனம் சஞ்சய் படத்தை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement