‘பரவாயில்லமா, எனக்கும் 2 குழந்தை இருக்காங்க’ – விமான நிலையத்தில் 10 மாத குழந்தையின் தாயை நெகிழ வைத்துள்ள அஜித்.

0
489
Ajith
- Advertisement -

அஜித் மிகவும் எளிமையான மனிதர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தன்னுடன் பணியாற்றும் நபர்களுக்கு கூட சரிக்கு சமமான மரியாதையை வழங்கக் கூடியவர். அதே போல ரசிகர்ளை கூட சார், மேடம் என்று மரியாதையுடனே தான் அழைப்பார். இப்படி ஒரு நிலையில் அஜித்தின் நல்ல குணத்திற்கு சான்றாக சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்ட்டா ஒருவர் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அஜித் அஜித்தின் தந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் காலமானார். மேலும் தனது தந்தையின் இறுதி சடங்கை கூட யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார் அஜித். தந்தையின் இறப்பின் சோகத்தில் இருந்தாலும் அஜித் தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் அஜித். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

- Advertisement -

அப்போது அவர் கையில் ஒரு வெற்றியை எடுத்து வந்தார் போது அங்கிருந்து ஒருவர் அந்த பெட்டியை கேட்க ‘நோ தேங்க்ஸ்’ என்று அவரே அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார். நடிகர் அஜித்தின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர பலரும் அஜித்தின் இந்த குணத்தை பாராட்டி இருந்தார்கள். ஆனால், உண்மையில் அந்த பெட்டி ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணின் பெட்டி என்றும் அஜித் அவருக்கு செய்த உதவி குறித்தும் அந்த பெண்ணின் கணவர் பதிவு ஒன்றே பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் என்னுடைய மனைவி கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவர் எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாகத்தான் பயணித்தார். அப்போது லண்டன் விமான நிலையத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், என்னுடைய மனைவி ஒரு டிராவலிங் சூட்கேஸ் மற்றும் குழந்தையை எடுத்துச் செல்லும் பை ஆகியவற்றுடன் தான் பயணித்தார்.

-விளம்பரம்-

மேலும், அஜித் என்னுடைய மனைவி தனியாகத்தான் செல்கிறார் என்பதை உணர்ந்து, விமானத்தில் ஏறும் வரை என் மனைவி வைத்திருந்த பையை விமானம் வரை எடுத்து வந்தார். ஆனால், அவர் அப்படி செய்ததை என் மனைவி மறுத்தபோது பரவாயில்லை மேடம், எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது அதனால் இது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு புரியும் என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறும் வரை சூட்கேசை அவரே எடுத்து வந்தார்.

பின்னர் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அந்த சூட்கேஸை என் மனைவியின் இருக்கைக்கு அருகில் பத்திரமாக வைக்கும் வரை கூடவே இருந்தார். அவர் உடன் பயணித்த ஒருவர் ‘தலைவா நீங்க எதுக்கு, நான் கொண்டு வரேன்’ என்று கூற, அதற்கு அவர் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். விமானத்திலிருந்து பேருந்து சென்ற போது கூட என் மனைவி ‘சூட்கேசை நான் எடுத்து வருகிறேன்’ என்று அவரிடம் கேட்டபோது கூட அவர் அதனை மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட ஒரு மனிதர் இது போல எல்லாம் செய்வதைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து விட்டேன். அவரின் இந்த குணத்தைப் பார்த்து வியந்துவிட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement