யார் சொன்னது அஜித் ஆடியோ விழாவில் கலந்துகொண்டதே இல்லை என்று. இந்த வீடியோவ பாருங்க.

0
22367
Ajith
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். தல அஜித் அவர்கள் சினிமா திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தல அஜித் எப்போதுமே அதிகமாக தமிழ் படங்களில் தான் நடிப்பார். இந்த வருடம் வெளிவந்த தல அஜித்தின் ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படம் ரசிகர்களிடையேயும், மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த படங்கள் நல்ல வசூலை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படமான “தல 60” படம் உருவாகிக் கொண்டுள்ளது என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் தல அஜித் படம் சமந்தமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை பார்த்து தல ரசிகர்கள் நம்ம அஜித்தா! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for ajith in award functions"

பொதுவாகவே தல அஜித் அவர்கள் எப்போதுமே ஆடியோ லான்ச், படம் ப்ரோமோஷன், சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே மாட்டார். இது எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தான். இதுமட்டும் இல்லாமல் அஜித் அவர்கள் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும்,சினிமா துறை நடத்தும் அவார்ட் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்ள மாட்டார். இப்படி இருக்கும் போது சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சரண் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘அசல்’ படம். இந்தப்படத்தில் அஜித்குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்துள்ளனர். அஜித் அவர்கள் அசல் படத்திற்கான ஆடியோ லாஞ்சுக்கு தன் மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார் என்று தகவல் தற்போது இணையங்களில் பரவி வருகிறது.

- Advertisement -

அதுவும் பல படங்களுக்கு பிறகு அசல் படத்திற்கு அஜித் வந்துள்ளார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். இது மட்டுமில்லாமல் தல அஜித் எப்போதுமே சொல்வது ‘ஒரு நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை’. அதோடு அந்த படம் ஓடுவதும்,வெற்றியடைவதும் ரசிகர்கள்,மக்கள் கையில் தான் உள்ளது என்று கூறுவார். ஆனால், அசல் படம் இசை வெளியிட்டு விழாவில் அஜித் கலந்து கொண்ட வீடியோ தல ரசிகர்களிடையே பயங்கர அதிர்ச்சியாக உள்ளது என்று கூறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தமிழில் அதிரடி, திகில் படமாக அஜித்தின் “மங்காத்தா” படம் அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார். மேலும், இந்த படம் அந்த வருட பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

No Audio Launch da…

Konjam Nadinga Ajith ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 22, 2019

மேலும், மங்காத்தா படத்தின் சக்சஸ் மீட்டிற்கு இயக்குனர் வெங்கட்பிரபும், அஜித்தும் கலந்து கொண்டாடி வந்தார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் மங்காத்தா படம் சக்சஸ் மீட் போது வெங்கட் பிரபு,அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து ரசிகர்கள் நம்ம தல அஜித் சக்சஸ் மீட், ஆடியோ விழாவில் கலந்து கொண்டாரா! என ஆச்சர்யத்திலும், வியப்பிலும் உள்ளார்கள் என தெரியவந்தது. அதோடு இதை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement