செல்பி கேட்ட ரசிகர்கள்..! குணமா, அன்பா சொன்ன அஜித்.! வைரல் வீடியோ

0
556
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் பல கோடி ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்ளாததால் அவரை வெளியில் பார்ப்பதே அவரது ரசிகர்களுக்கு மிகவும் அரிதாக இருந்து வருகிறது. இதனால் அஜித்தை எப்போது வெளியில் கண்டாலும் அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து விடுவார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் தனது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய அஜித் அவர்களிடம் இது ஸ்கூல் தயவு செஞ்சி வீடியோ எடுக்காதீங்க நானே சொல்லி அனுப்பிகிறேன் போங்க தம்பி என்று மிகவும் பக்குவமாக எடுத்துச் அந்த ரசிகருக்கு கூற அந்த ரசிகரும் அஜித்தின் பேச்சை கேட்டு விடியோ எடுப்பதை நிறுத்திவிட்டார்.

- Advertisement -

இருப்பினும் அஜித்தை வீடியோ எடுத்த சில நொடி அடங்கிய காட்சி மட்டும் சமூக வளைத்தளத்தில் வெளியாகி இருந்தது .ரசிகரிடம் பக்குவமாக எடுத்து சொன்ன அஜித்தின் குணத்தை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் மெய் சிலிர்த்துள்ளனர்.

Advertisement