அஜித் நடிக்க இருந்த நந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! பலவருடம் கழித்து வெளிவந்த புகைப்படம்

0
372
nandha

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பல்வேறு ஹிட் படங்கள் வந்திருக்கின்றது. அதில் ஒரு சில நடிகர்கள் தவறவிட்ட படத்தில் கூட அஜித் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாக இருந்து பின்னர் கைநழுவி போன சூப்பர் ஹிட் படம் எது என்று தெரியுமா.

அந்த படம் வேறு எதுவும் இல்லை இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த “நந்தா” படம் தான் அது. தனது சினிமா வாழக்கையில் ஒரு சிறந்த ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்த்து.

ஆனால், முதன் முதலில் இந்த படத்தில் நம்ம தல அஜித்தான் நடிக்க இருப்பதாக இருந்தது. அதற்காக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட அஜித் இருப்பது போல வெளியாகி இருந்தது.ஆனால், சில பல காரணங்களால் இந்த படத்தில் அஜித்தால் நடிக்க முடியாமல் போய்யுள்ளது.

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து “நந்தா ‘ படத்தில் அஜித் நடிக்கிறார் என்று வெளியாகி இருந்த பார்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.