திருமணத்திற்கு தனது அம்மா மனைவி மகளோடு யோடு கலந்து கொண்ட அஜித் – புகைப்படம் இதோ.

0
937
ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

-விளம்பரம்-

ஆனால், அவர் வெளியில் வந்தாலே அவரை புகைப்படம் எடுப்பது வீடியோ எடுப்பது என்று ரசிகர்கள் செய்து கொண்டு தான் வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த அஜித்தை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து புகைப்படம் எடுத்தனர். இதனால் கடுப்பான அஜித், ரசிகர் ஒருவரின் செல் போனை புடிங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.அதே போல மருத்துவமனைக்கு வந்த அஜித்தை வீடியோ எடுத்ததால் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது அங்கே வேலை பார்த்துவந்த பர்ஷானா என்ற பெண் ஒருவர் அஜித்தை கண்ட ஆர்வத்தில் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அஜித்தை வீடியோ எடுத்ததால் சம்மந்தபட்ட அந்த பர்ஷானாவை பணியிலிருந்து நீக்கியது மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள் இவர்கள் இருவரையும் பெரும்பாலும் அஜித் வெளியுலகத்திற்கு காட்டுவது கிடையாது.

Ajith Kumar Family Photos - Parents, Father, Mother, Sister, Spouse, Son &  Daughter. - YouTube

இருப்பினும் அவ்வப்போது இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் தென்பட்டு விடுகின்றனர் அதே போல இவர்கள் வெளியில் வந்தாலே ரசிகர்கள் இவர்களை புகைப்படம் எடுத்து வைரல் ஆகி விடுகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் தனது அம்மா மனைவி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement