ரசிகர் ஒருவரை நடிகர் அஜித் அடித்து விட்டார் என்று பிரபல நடிகை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்து ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஆர்த்தி அவர்கள் பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் ஆர்த்தி, ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய தலையில் அஜித் என்று பெயரை எழுதி ஹேர் ஸ்டைல் பண்ணி இருந்தார்.
ரசிகரை அடித்த அஜித்:
மேலும், அந்த ரசிகர் தல தல என்று கத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்த அஜித், உடனே அவரை வரவைத்து பளார் என்று அவருடைய கன்னத்தில் அடித்தார். அதற்குப் பிறகு அவரிடம் காசு கொடுத்து அஜித், மொட்டை அடித்துக்கொண்டு வா என்று சொன்னார். அந்த ரசிகரும் மொட்டை அடித்து வந்தார். பின் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, இனி இப்படி செய்யக்கூடாது. அன்பு மனதில் இருந்தால் போதும் என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
தல ன்னு பச்சை குத்திக்குறது, தல ன்னு ஹேர் கட் பண்றது,
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) February 12, 2024
இந்த மாரி Extreme விஷயங்களை Encourage பண்ணாத ஒரே நடிகன் ♥️
தன் ரசிகனா சக மனுஷனா பார்த்து நல் வழி செய்யுற ஒரு நல்லா மனிதன் #AjithKumar ♥️#VidaaMuyarchi .. #AjithKumarpic.twitter.com/YAFzPnFY7B
அஜித் குறித்து சொன்னது:
ஒரு ரசிகனை சக மனிதனாக பார்க்கும் எண்ணம் அஜித் இருக்கு. அந்த அளவிற்கு அவர் நல்ல மனிதர் என்று ஆர்த்தி கூறியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும், ஆக்ஷனும் எமோஷனும் கலந்த இக்கதையின் பெரும் பகுதி அஜர்பைஜானில் நடந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
அஜித் நடிக்கும் படம்:
இதை அடுத்து அஜித் அவர்கள் ‘ குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதை அடுத்து இன்னும் சில படங்களில் அஜித் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.