அஜித்தை பாராட்ட விஜய்க்கு மனசு இல்லையா? நேரமில்லையா? மேனஜர் சுரேஷ் சந்திரா கொடுத்த விளக்கம்

0
149
- Advertisement -

விஜய் குறித்த தவறான விமர்சனங்களுக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி 30 ஆண்டுகளுக்கும் மேல் அஜித் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வருவதாற்காக அஜித்குமாருக்கு சமீபத்தில் மத்திய அரசால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அஜித், குடியரசுத் தலைவர் அவர்கள் பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

- Advertisement -

அஜித் பத்மபூஷன் விருது:

இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை மோடி தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் இதனை என்பதை உணர்வேன் என்று கூறி இருந்தார்.

அஜித் செய்த சாதனை:

மேலும், அஜித்துக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டது அடுத்து பிரபலங்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட துபாயில் நடந்த ’24H’ கார் பந்தயத்தில், 991 பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

விஜய் குறித்த விமர்சனம்:

இதற்கு பலருமே வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இப்படி கார் ரேஸ் மற்றும் பத்மபூஷன் விருது கிடைத்ததை அடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை அறிவித்து இருந்தார்கள். ஆனால், அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வந்தது. அஜித்தை பாராட்ட விஜய்க்கு மனசு இல்லையா? நேரம் கூட இல்லையா? என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

அஜித்தின் மேனேஜர் விளக்கம்:

இந்நிலையில் இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பது, கொஞ்சமும் ஆதாரம் இல்லாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள். அஜித் சார் ரேசில் வெற்றி பெற்றதுமே விஜய் சாரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது. அதேபோல சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதுமே விஜய் சாரிடம் இருந்து வாழ்த்து வந்தது. இருவருக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளி கூட உண்மை கிடையாது. தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement