முருகதாஸிடம் தல ரசிகர்கள் கேட்ட கேள்வி ? பதில் சொல்லாமல் நழுவிய முருகதாஸ்

0
741
AR murugadoss

இயக்குனர் ஏ. ஆர்.முருக தாஸ் எடுத்த அனைத்து படமும் வெற்றி என்றே கூறலாம்.இவர் முதல் முதலில் எடுத்த அஜித் நடித்த தீனா படம் மாபெரும் வெற்றியடைந்து.அந்த படம் மூலம் தான் அஜித்துக்கு தல என்ற பெயரும் வந்தது அந்த பெருமை ஏ. ஆர். முருகதாஸையே சாரும்.

murugadoss

தீனா படத்திற்கு பிறகு பிறகு அஜித்தை வைத்து முருகதாஸ் எந்த படத்தையும் எடுக்கவில்லை.பல படங்கள் அஜித் நடிக்கவிருந்து பின்னர் கைவிடப்பட்டது. சூர்யா நடித்த கஜினி படம் கூட முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் அஜித்தின் கை நழுவி போனது.

தீனா படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ஒன்றாக இணையவில்லை என்றாளும் இவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏ. ஆர். முருகதாஸ் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட நடிகர் அஜித் முதல் ஆளாக நேரில் சென்று பார்த்தார்.
தற்போது விஜயை வைத்து 3 வது படத்தை இயக்கி வரும் முருகதாஸ்.முருகனுக்கு உகந்த கிருத்திகை தினமான இன்று முருகனை வழிப்படுவதாற்காக சென்னை கந்த கோட்டத்தில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

ajith

அங்கு இவரை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளனர் ஆனால் முருகதாஸ் யாரையும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் அஜித் ரசிகர்கள் சிலர் எங்கள் தல யை வைத்து எப்போது படம் எடுக்கப்போகிறீர்கள் என்று கோஷங்களை எழுப்பியுள்ளார் .ஆனால், அதற்கு எதுவும் பதில் கூறாமல் தனது கைகளை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுவிட்டார் முருகதாஸ்.