டெல்லியில் சாதனை பெண்ணை சந்தித்து டிப்ஸ் கேட்டுகொண்டுள்ள அஜித். இந்த பெண் யார் தெரியுமா ?

0
1706
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். காரை விட இவருக்கு பைக் தான் மிகவும் பிடித்த விஷயம். அஜித் படம் என்றாலே கார் அல்லது பைக் காட்சிகள் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அவ்வளவு ஏன் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது, படத்தில் ஒரு பைக் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பைக் அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

ஹைதராபாத் ஷெடியூல் முடிந்த பிறகு, சென்னைக்கு அந்த பைக்கிலையே தான் 650 கிலோமீட்டர் டிராவல் செய்து வந்தாராம் அஜித். அவருக்கென போடப்பட்டிருந்த விமான டிக்கெட்டை கூட கேன்சல் செய்ய சொல்லிட்டாராம் அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’.

இதையும் பாருங்க : எம்.ஜி.ஆரை ‘எம்ஜார்’னு எழுதலாமா ? ’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ தலைப்பிற்கு எதிர்ப்பு.

- Advertisement -

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. ஆனால், உடனடியாக இந்தியா திரும்பாமல் ரஸ்யாவில் சில நாட்கள் தங்கி பைக் மூலம் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறாராம். மேலும், இந்த பயணத்தில் நடிகர் அஜித் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

சமீபத்தில் நடிகர் அஜித், டெல்லியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் அஜித், ஒரு சாதனை பெண்ணை டெல்லியில் சந்தித்துள்ளார். உலகம் முழுவதும் பைக்கிலேயே தனியாக பயணம் செய்த மாரல் யசார்லூவை தான் அஜித் சந்தித்து உள்ளார். இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யசார்லூ தற்போது டெல்லி வந்துள்ளார். எதிர்காலத்தில் பைக்கிலேயே உலகம் முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அஜித், அவரது ஆலோசனைகளையும், டெல்லி அனுபவத்தையும் கேட்டறிந்தார். 

-விளம்பரம்-
Advertisement