தேசிய விருது பெற்ற இயக்குனரை திடீர் என்று சந்தித்த அஜித்.! வைரலாகும் புகைப்படம்.!

0
1053
Ajith
- Advertisement -

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில்நடித்து வருகிறார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கபூர் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரத்தை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அதிகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக சில போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், அது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர் என்று பின்னர் தெரியவந்தது.

- Advertisement -

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் அஜித் நடிக்கிறார். ஆனால் படத்தை காட்சி வாரியாக அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் வினோத். படத்தை எடுத்த பிறகு அதை பிங்க் படத்தின் தயாரிப்பாளர் சூஜித் சர்காருக்கு போட்டுக் காட்ட உள்ளார்களாம்.

இந்தநிலையில் ‘தல 59’ பட படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே நடிகர் மோகன்லால் நடிப்பில் தேசியவிருது பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் ’மரக்கார்’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் அஜித்தை பிரியதர்ஷன் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement