9 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் இப்படி ஆடை அணியலாமா? கனிகாவிற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.

0
79094
Kanika
- Advertisement -

நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர். அதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என ஒதுங்கிவிட்டார். அழகிப் போட்டியில் பட்டமும் வென்றுவிட்டார் கனிகா.

-விளம்பரம்-

இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். தற்போது இவரது மகனுக்கு 9 வயது ஆகிறது.

இதையும் பாருங்க : vj அஞ்சனாவின் மகனா இது என்ன இப்படி கிடுகிடுனு வளர்ந்துட்டார். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

ருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே அம்மணி யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை கனிகா தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் 9 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில் இப்படி ஆடை அணியலாமா என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement