வேதாளம் படத்தில் அஜித் Introவில் மொட்ட ராஜேந்திரன் வீசிய கத்தியில் என்ன எழுதி இருக்கு பாருங்க – ப்பா, சிறுத்தை சிவா என்ன ஒரு Detailing

0
304
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அஜித் படம் திரையரங்குகளில் வெளியிட்டாலே போதும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித் எப்போதும் தனக்கு comfort ஆக இருக்கும் இயக்குனர்களிடம் மட்டும் தான் தொடர்ந்து படம் பண்ணுவார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

-விளம்பரம்-

அந்த வகையில் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. சிறுத்தை படத்திற்கு முன்பாவே இவர் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், அந்த இரண்டு படங்களும் அட்டர் பிளாப். அதே போல சிறுத்தை படம் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான Vikramarkudu படத்தின் ரீ – மேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி:

மேலும், சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து வேதாளம், விவேகம் விசுவாசம் என்று அஜித்தை வைத்து மட்டுமே படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் அஜித்தின் வேதாளம் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், வீரம் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அவர்கள் அஜித்தை வைத்து வேதாளம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

வேதாளம் படம் :

இந்த படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படம் அஜித்தின் 56-வது படமாகும். இதை காண்பிக்கும் வகையில் அஜித்தின் அறிமுக காட்சியில் அஜித்திற்கு முன் ட்ரெய்னில் கத்தி ஒன்றை வீசுவார்கள்.

-விளம்பரம்-

கத்தியில் அஜித் 56 படம்:

அந்த கத்தியில் அஜித் 56 என்று எழுதப்பட்டிருக்கும். அதை அஜித் கையில் எடுப்பார். இந்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை தல ரசிகர்கள் பலரும் வைரலாகி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் வெளியாகி இருந்தது. வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார். இதையும் போனிகபூரே தயாரித்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is Ajith62.jpg

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து Ak62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படி ஒரு நிலையில் அஜித்தின் ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிவாவிடம் கேட்ட பொது. அதய் அஜித் சார் அதிகாரபூர்வமாக சொல்வது தான் சரி என்று கூறியிருக்கிறார். அஜித் 63வது படத்தை சிவா இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement