பாகுபலி செட்டில் அஜித் படம்.! தெறிக்கவிடும் விஸ்வாசம்..!

0
761

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த மாதம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

ajith

அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம்(ஜூன்) 17ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைத்ரா பாத்தில் இந்த மாதம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியது.

இதற்காக பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களின் படப்பிடிப்புகள் எடுக்கபட்ட ராமோஜி ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டுள்ளதாம் . இதற்காக ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமத்தை போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் படத்தில் கிராம கதைகளும் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

ajithkumar

30 நாட்கள் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த படத்தின் சண்டை இயகுணராக திலீப் சுப்ரயன் பணியாற்றி வருகிறாராம். இவர் நடிகர் கார்த்திக் நடித்த தீரன் படத்தில் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதனால் அந்த படத்தை போன்றே இந்த படத்திலும் அக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் தீபாவளிக்குள் எப்படியாவது இந்த படத்தை முடித்து விட வேண்டும் என்று இயக்குனர் சிவா மும்மரம் காட்டி வருகிறார் .