அஜித்தை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாதுனு சொன்னாங்க-இயக்குனர் சொன்ன ரகசியம்.

0
12774
Ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார். இவருடைய படங்கள் வரப்போகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடுவார்கள். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. தற்போது அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
We will never do a movie with Ajith said Producers and Distributors – Director Vikraman breaks the truth

We will never do a movie with Ajith said Producers and Distributors – Director Vikraman breaks the truth

Wetalkiess ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮಾರ್ಚ್ 21, 2020

தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் தல. தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, அப்போது இயக்குனர்கள் நாங்க எல்லாரும் சேர்ந்து பெப்சிக்கு எதிராக படைப்பாளி என்ற குழுவை ஆரம்பித்தோம். அதாவது பெப்ஸி என்றால் தொழிலாளர்கள் யூனியன். நாங்க எல்லா இயக்குனர்களும் சேர்ந்து படைப்பாளி யூனியனில் இருக்கும் போது அஜீத் பெப்சிக்கு சென்று விட்டார்.

அதற்கு பின்னர் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சேர்ந்து அஜித்துக்கு படவாய்ப்புகள் கொடுக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டார்கள். அந்த நேரத்தில் தான் நான் இயக்கும் ஒரு படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. பின் இது குறித்து தயாரிப்பாளரிடம் சொல்லி அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் அவரும் சரி என்று சொல்லிவிட்டார். அதற்கு முன்னாடியே புதியமன்னர்கள் படத்தில் நடிப்பதற்கு அஜித்திடம் பேசினேன்.

-விளம்பரம்-

புதியமன்னர்கள் படத்தில் பாபு பாபு கணேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது. அப்போது அவருக்கு பைக் ரேஸில் விபத்து ஏற்பட்டு முதுகில் ஆபரேஷன் செய்து ஆஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருந்தார். அதனால் அவரால் நடிக்க முடியாமல் போனது. சரி மறுபடியும் இந்த படத்திலாவது அவரை நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் பேசினோம். பின் அஜீத் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து பேசினார். அப்போது அஜித் உங்க படத்தில் நான் வில்லனாக நடிக்கக் கூட ரெடி. என்கிட்ட எதுவும் கேட்காதீங்க எதுவும் சொல்லாதீங்க நீங்க சூட்டிங் எப்ப மட்டும் சொல்லுங்க.

நான் வந்து நடிக்கிறேன் என்று சொன்னார். அப்படியே தான் வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கதை கேட்பார். கேட்டுட்டு பிரமாதமாக எதிர்பார்க்காத அளவிற்கு நடித்துத் தருவார். உண்மையிலேயே அஜித் ஒரு ஜென்டில்மேன் என்று கூறினார். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

Advertisement