ஹாலிவுட் தரத்தில் அஜித்தின் அடுத்த படம்.! மூன்று கண்டங்களுக்கு செல்ல உள்ள அஜித்.!

0
1330
Ajith-60
- Advertisement -

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். மேலும், ஜோடியாக வித்யா பாலன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
thala 60

தலயின் 59 வது படமான இதை முடித்துவிட்டு தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படியுங்க : வருடத்திற்கு ஒருவர் தான்.! திருமணம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு.!

- Advertisement -

மேலும், இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கார் ரேஸராக நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. சமீபத்தில் இந்த படத்தை பற்றிய சில அப்டேட்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை மூன்று கண்டங்களில் படமாக்க போனிகபூர் திட்டமிட்டுள்ளார். புடாபெஸ்ட், தென்னாப்பிரிக்கா மற்றும்  மத்திய கிழக்கு நாடுகள் என மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளில் இந்த படம் நான்கு ஷெட்யூல்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய தயரிப்பாளர் போனி கபூர், தமிழ் படம் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன்.  எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். அவரை ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க ஆசை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனி கபூரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தில் படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்தமான அனைத்தும் இருக்கும் படமாக அது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

Advertisement