விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார் மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிகே படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதேபோல இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் வினோத் குமார் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே உறுதியானது. இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார்.
அஜித் நடிக்கவுள்ள அந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் உடல் எடை குறைந்து காணப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது எனவே போலீஸ் கெட்டப்பிற்காக தான் அஜித் உடலை குறைத்து வருகிறார் என்ற எண்ணமும் தோன்றுகிறது.
ஆனால், இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கார் ரேஸராக நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் விதத்தில் பேசியுள்ள போனி கபூர், அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன். எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.