விசுவாசம் படப்பிடிப்பே இன்னும் முடியல..! அதுக்குள்ள அஜித்தின் அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவா.?

0
401
Visuvasam-Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் அஜித் சமீப காலமாக எந்த ஒரு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்து வருகிறது. ஆனால், அந்த குறை விரைவில் நிவர்த்தியடைய போகிறது.

 

- Advertisement -

நடிகர் அஜித் நடித்த கடைசி 3 படங்களும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் வெளியானது. அதுபோக தற்போது 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ள நடிகர் அஜித் “விசுவாசம் ” படத்தில் நடித்து வருகிறார். இதனால் அஜித்- சிவா ஜோடியையே பார்த்து ரசிகர்களுக்கு சளித்து போய்விட்டது.

இந்நிலையில் “விசுவாசம்” படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் எந்த இயக்குனருடன் இணைந்து படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அது ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் கயாத்ரி இயக்கத்த்திலோ அல்லது ‘தீரன்’ படத்தை எடுத்த எச் .வினோத் இயக்கத்திலோ இருக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது.

Pushkar-Gayathri

ஆனால், தற்போது அஜித்தின் அடுத்த படம் இயக்குனர் வினோத் குமாருடன் இருக்கலாம் என்று இணையத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் எச். வினோத் ஏற்கனவே ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் ‘ என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பதால், இவரது இயக்கத்தில் அஜித் நடித்தால் அது மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement