ஒரே இயக்குனருடன் இரண்டு படத்தில் கமிட் ஆன தல அஜித்..! அஜித் போட்ட கண்டிஷன்.! Ok சொன்ன இயக்குனர்.!

0
1629
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

pink-movie

- Advertisement -

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது.

தற்போது கிடைத்த தகவலின்படி இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த “பிங்க்” படத்தை தான் ரீ-மேக் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரீ-மேக் படத்தை நான் எடுக்கமாட்டேன், என்னிடமே சொந்த கதை உள்ளது என்று இயக்குனர் வினோத் யோசித்தாராம்.

-விளம்பரம்-

Vinoth

ஆனால், அஜித் இதற்காக இயக்குனர் வினோத்திடனம் பேசி, இப்போதைக்கு இந்த படத்தை முடித்துக்கொடுங்கள், அடுத்து சத்யஜோதி நிறுவத்திற்காக மீண்டும் நாம் இருவரும் இணைந்து நீங்கள் சொன்ன கதையில் படம் எடுக்கலாம் என்று கூறியுள்ளாராம். இதனால் பிங்க் படத்தை அஜித்திற்கு ஏற்றார் போல பட்டி டிங்கரிங் செய்து வருகிறார் இயக்குனர் வினோத்.

Advertisement