விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் தல அஜித் அடுத்த படமா ? கசியும் தகவல்

0
7286
Ajith-vijay
- Advertisement -

அஜீத் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் படு மும்மரமாக நடந்து வருகிறது. படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி அவருக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.படத்திற்கு இமான் இசை அமைக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

visvasam

- Advertisement -

தற்போது மேலும் ஒரு இன்பச் செய்தியாக போக்கிரி படத்தை இயக்கிய நடன புயல் பிரபுதேவா – அஜித் கூட்டணியில் ஒரு படம் எடுக்கவிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவு பெறாத நிலையில் அஜித்தை பிரபுதேவா அடிக்கடி சந்தித்து வருகிறார் என்றும்,அவர் அஜித்திடம் கதை ஒன்றை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 2011 ல் விஷால் நடித்த வெடி படத்திற்கு பிறகு, தமிழில் எந்த படத்தையும் பிரபுதேவா இயக்கவில்லை.அதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் எடுக்க போகும் அல்டிமேட் ஸ்டாரின் படம் மெகா ஹிட் ஆக வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

pokkiri-compressed

இந்த படத்தின் அறிவிப்பு விசுவாசம் படம் வெளியாவதற்கு முன்பாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement