அஜித் குட்டி போன் மட்டுமா யூஸ் பன்றாரு.! முதன் முறையாக சோதனைக்கு உள்ளான தலயின் சிம்ப்ளிஸிட்டி.!

0
1310
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் விஜய், அஜித் இருவரைப் பற்றிய ஒரு சிறு தகவல் வந்தால் கூட அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு தகவல் இன்று அஜித்தைப் பற்றி வெளிவந்திருக்கிறது. அஜித்திடம் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். சாதாரண மொபைல் போன் மட்டும் தான் பயன்படுத்துகிறார் என்று கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

அப்படி என்றால் திரையுலகில் நடக்கும் விஷயங்கள் அஜித்துக்கு எப்படி போய்ச் சேருகிறது என்று கேட்கிறீர்களா. அதற்கென அஜித்தைச் சுற்றி சிலர் இருக்கிறார்கள். தினமும் என்னென்ன நடக்கிறது, பத்திரிகைகளில் என்ன வருகிறது, சமூக வலைத்தளங்களில் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை தவறாமல் அப்டேட் செய்துவிடுவார்கள். அஜித்திடம் போன்தான் இல்லை, ஆனால், போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று அஜித் வட்டாரங்கள் கூறினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் அஜித் குட்டி போனை பயன்படுத்தவில்லை அவரும் ஸ்மார்ட் போனை தான் பயன்படுத்துகிறார் என்று புதிய விமர்சனம் ஒன்று அஜித் மீது எழுந்துள்ளது. அதற்கு சான்றாக அஜித்தின் சட்டை பையில் ஸ்மார்ட் போன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்தல் பல ஆன்டுகளுக்கு முன்னர் எடுக்கபட்ட புகைப்படம் போன்று தான் தெரிகிறது. மேலும், அஜித் சிறிய போனை பயன்படுத்துகிறார் என்ற செய்தி விஸ்வாசம் படத்தின் போது தான் உறுதியானது. எனவே, சில வருடங்களுக்கு வேண்டுமானால் அஜித் இதுபோன்ற போனை பயன்படுத்தி இருக்கலாம்.

-விளம்பரம்-
Advertisement